மதுரை அருகே கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை
மதுரை மாவட்டம் டீ. கிருஷ்ணாபுரம் பகுதியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே டீ. கிருஷ்ணாபுரத்தில் வசித்து வரும் காசி முருகன் இவரது மகன் சக்தீஸ்வரன். இவர், உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த சக்தீஸ்வரன் டீ. கிருஷ்ணாபுரம் அருகே உள்ள கருப்பசாமி கோவிலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து எம். கல்லுப்பட்டி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவலின் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சக்தீஸ்வரன் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவர் சாவில் மர்மம் ஏதும் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.