காலையில் மது விற்பனை ஜோர்: கண்டுகொள்ளாத உசிலம்பட்டி போலீசார்
உசிலம்பட்டி நகரில், முறைகேடான மது விற்பனையை, போலீசார் கண்டு கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
தமிழக அரசு, டாஸ்மாக் மதுக்கடைகளில் பகல் 12 மணி முதல், இரவு 10 மணி வரை மட்டுமே மது விற்பனை செய்ய அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், உசிலம்பட்டி சந்தைத் திடல் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் இதெல்லாம் கடைபிடிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அங்கு, காலை நேரத்தில் இருந்து மதியம் 12 மணி வரை மதுக்கடை திறக்கப்படாவிட்டாலும், கள்ளத்தனமாக மது, அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட காவல் துறையினர், இதுகுறித்து கண்டும் காணாமல் உள்ளனர். உடனடியாக, இதை தடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.விடுத்துள்ளனர்.