உசிலம்பட்டி: திம்மனத்தம் ஊராட்சியில் தென்மாநில அளவில் கபடி போட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள திம்மனத்தம் ஊராட்சியில் தென் மாநில அளவில் கபடி போட்டி நடைபெற்றது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள திம்மனத்தம் ஊராட்சியில், மதுரை அமெச்சூர் கபடி கழகம் அனுமதியுடன், புரோகபாடி விதிமுறைகளுக்கு உட்பட்டு, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத் துணைத் தலைவர் மற்றும் கழக செயலாளர்கள் தலைமையில் போட்டிகள் நடைபெற்றன.
இதில், உசிலம்பட்டி கிராமத்தில் இருக்கும் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் பயிற்சி அளிக்கும் இளைஞர்கள் சதாசிவம், ஈசன் இவர்களின் ஏற்பாட்டில் புளிப்பட்டி கிராமத்தில் இரு தினங்கள் 86 அணிகள் கலந்து கொண்டு கபாடி போட்டி நடைபெற்றது.
பரபரப்பான இறுதிச்சுற்று ஆட்டத்தில், கொக்குளம் அணியினரும், வாள்முனை கபடி குழு அணியினரும் மோதினர். முடிவில், கொக்குளம் அணியினர் முதல் பரிசை வென்றனர். இரண்டாம் பரிசை வாள்முனை அணியினர் வென்றனர். மூன்றாம் பரிசை நாட்டமங்கலம் அணியினர் பெற்று சென்றனர்.