மதுரை அருகே 10 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த ஆட்டுக் கிடாய் சண்டை போட்டி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அரசு அனுமதியுடன் 10 ஆண்டுகளுக்குப் பின் உற்சாகத்துடன் கிடா சண்டை போட்டி நடைபெற்றது.;

Update: 2022-01-23 03:30 GMT

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த சீமநூத்து கிராமத்தில் தமிழக அரசின் அனுமதியுடன் நடந்த ஆட்டுக்கிடாய் சண்டைப் போட்டி.

தமிழக அரசு அனுமதியுடன் 10 ஆண்டுகளுக்கு பிறகு கிடாய் சண்டை போட்டி நடைபெற்றது .

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த சீமநூத்து கிராமத்தில் தமிழக அரசின் அனுமதியுடன் ஆட்டுக்கிடாய் முட்டு சண்டை போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் கலந்து கொள்ள கருமாத்தூர் ,திருமங்கலம் ,விருதுநகர் ,மதுரை, திருப்புவனம் ,மானாமதுரை, மேலும் பல ஊர்களில் இருந்து கிடா முட்டு சண்டை போட்டிக்கு கம்பீரமான சடை முடியுடன் கூடிய கிடாய் களைக் கொண்டு வந்து போட்டியில் கலந்துகொண்டனர் .

இப்போட்டியில் வெற்றி பெறும் கிடாய்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.கிடாய்  சீறிப்பாய்ந்து  முட்டி சண்டை போட்ட காட்சி பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்தது . மேலும் தமிழக அரசின் விதிகளுக்கு கட்டுப்பட்டு இந்த கிடாய்   சண்டை போட்டி நடைபெற்றது.இப்போட்டி நீண்ட காலங்களுக்குப் பிறகு தமிழக அரசின் ஒப்புதலோடு நடைபெற்ற போட்டியை ஏராளமான மக்கள் கண்டு மகிழ்ந்தனர்

Tags:    

Similar News