பேரையூரில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு

பேரையூரில் தலைக்கவசம் அணியாததால் இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம்.;

Update: 2021-12-14 17:44 GMT

பைல் படம்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட பேரையூர் வலையங்குளம் சாலையில் விக்னேஷ் (25 ), சங்கர் (25) இருவரும் தாடையம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்பொழுது அதிவேகமாக சென்ற இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் விக்னேஷ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த சங்கரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து சேடபட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் விக்னேஷ் என்பவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற போது நிலை தடுமாறி விழுந்ததால் உயிர்பலி ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்விபத்து குறித்து மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் பாஸ்கரன் அவர்கள் கூறுகையில், அனைவரும் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணிவது மிக முக்கியம். இவ்விபத்து ஆனது தானாக நிலைதடுமாறி விழுந்து உயிர் பலியாகி உள்ளது. இறந்த வாலிபர் தலைக்கவசம் அணிந்திருந்தால் தலையில் காயம்பட்டு இருக்க வாய்ப்பு இல்லை, உயிர்பலி ஏற்பட்டிருக்காது.

அனைவரும் கண்டிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்லும்பது தங்களது குடும்பங்களை கருத்தில்கண்டு தலைக்கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

Similar News