உலக தண்ணீர் தினம்: அகத்தியர் அன்னதான குழுசார்பில் மரக்கன்று நடும் விழா
திருமங்கலம் அருகே கரிசல்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடப்பட்டது;
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பள்ளியில் மரக்கன்று நடவு செய்த அகத்தியர்அன்னதானகுழுவினர்
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு திருமங்கலம் அருகே உள்ள கரிசல்பட்டி கிராமத்தில் அகத்திய அன்னதான அறக்கட்டளை சார்பாக கரிசல்பட்டி கிராம ஊராட்சி ஒன்றிய பள்ளியில் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி அகத்தியர் அன்னதான அறக்கட்டளை நிறுவனர் பா. முத்துப்பாண்டி தலைமையில் நடைபெற்றது.
உலக தண்ணீர் தினத்தையொட்டி பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு வழங்கும் விதமாக என்.சுகுமார் சாக்யா அறக்கட்டளை, த.சோம்நாத் சித்தர்கூடம், திருமங்கலம் களப்பணி நண்பர்கள் குழு எஸ்.எம்.ரகுபதி, அன்னை வசந்தா அறக்கட்டளை நிர்வாகிகள் ஆகியோர் கலந்துக்கொண்டு பேசினர்.
அகத்தியர் அன்னதான அறக்கட்டளை செயலர் சகுந்தலாதேவி, பள்ளி தலைமையாசிரியரிடம் மரக்கன்றுகளையும் குழந்தைகளுக்கு இனிப்பும் வழங்கினார்கள். ஊராட்சி நடுநிலைப்பள்ளி சார்பாக கோமதி அறிவியல் சமூகவியல் ஆசிரியர் நன்றி கூறினார்.