கொரோனா தொற்று பரவலை தடுக்கும் முயற்சியில் வில்லூர் ஊராட்சி முதலிடம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் வில்லூர் கிராம ஊராட்சியை குப்பை இல்லாத கிராமமாக ஊராட்சி மன்ற தலைவர் மாற்றியுள்ளார்;

Update: 2022-01-10 16:00 GMT

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் முயற்சியில் வில்லூர் ஊராட்சி முதலிடம்.

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் முயற்சியில் வில்லூர் ஊராட்சி முதலிடம்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட கள்ளிக்குடி தாலுகா வில்லூர் ஊராட்சி மன்ற தலைவர் கணபதி. இவர்  கொரோனா தொற்று பரவுதலை தடுக்கும் விதத்தில் வில்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கொரோனா தொற்று பாதிப்பு உள்ளவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ முகாம், மற்றும் தனி படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளதாகவும்



தினமும் காலை மாலையில் ஒலிபெருக்கி மூலம் கொரோனா ஒமைக்ரான் நோய் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாக்கவும், சமூக இடைவெளி பற்றிய கருத்துகள், உபகரணங்கள் வழங்குதல், மேலும் தண்டோரா மூலம் தினமும் காலையில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல்,


 



மேலும் கிராமம் முழுவதும் குப்பை இல்லாத கிராமமாக மாற்றியுள்ளதாகவும் தெரிவித்தார்.மேலும் அவருடைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வில்லூர் கிராம மக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர்.வில்லூர் சுத்தமான கிராமமாக காட்சி அளிக்கப்பட்டது.

Tags:    

Similar News