நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : திருமங்கலம் தொகுதியில் அமமுகவினர் விருப்ப மனு
மதுரை மாவட்டம் திருமங்கலம், உசிலம்பட்டி தொகுதி திருப்பரங்குன்றம் தொகுதிகளில் அமமுக வினர் விருப்ப மனு தாக்கல் செய்தனர்;
மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளருக்கான விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில், மதுரை மாவட்டத்திற்கு உள்பட்ட உசிலம்பட்டி பேரையூர் டி.கல்லுப்பட்டி, திருமங்கலம், திருப்பரங்குன்றம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வேட்பாளர்கள் விருப்ப மனுக்களை மதுரை மாவட்ட செயலாளர் மகேந்திரன் முன்னிலையில் விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டன. இதில், டேவிட் அண்ணாதுரை உட்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திருமங்கலம் நகர அம்மா பேரவை நகர செயலாளர் சங்கீத பிரபு உட்பட மற்றும் பல முக்கிய நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் விருப்ப மனுதாக்கல் செய்தனர்.