திருமங்கலம் ரயில்வே கேட்டில் மோதிய லாரி: பல ணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
மதுரை மாவட்டம் திருமங்கலம் காமராஜர் வடகரை ரயில்வே கேட்டில் லாரி மோதியதால் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ரயில்வே கேட் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 5 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் ரயில் நிலையத்திற்கு அருகில் விடத்தகுளம் பகுதியில் ரயில்வே கேட் அமைந்துள்ளது. நேற்று காமராஜர்புரம் பகுதியில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு மதியம் 12 மணியளவில் இந்த வழியாக லாரி ஒன்று சென்றுள்ளது. அந்த சமயம் ரயில் வருவதற்காக கேட் கீப்பர் ரயில்வே கேட்டை மூடினார். இந்நிலையில் கேட்டை மூடுவதற்குள் சென்று விடலாம் என நினைத்த லாரி ஓட்டுநர் வாகனத்தை வேகமாக இயக்கியுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக லாரியை ரயில்வே கேட் மீது பயங்கரமாக மோதியது. இதனால் ரயில்வே கேட்டை திறக்க முடியாமல் போனது. இது குறித்து அறிந்த ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரயில்வே கேட்டில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 5 மணி நேரம் கழித்து பழுது சரி செய்யப்பட்ட பிறகு போக்குவரத்து சீரானது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.