திருமங்கலம் அருகே குட்கா கடத்தியவர் கைது: 13 கிலோ குட்கா பறிமுதல்
திருமங்கலம் அருகே தும்மக்குண்டு பகுதியில் இருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 13 கிலோ புகையிலை 28,000 பணம் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
மதுரை மாவட்டம் சிந்துபட்டி உதவி ஆய்வாளர் குபேந்திரன தலைமையில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக திண்டுக்கல்லை சேர்ந்த கரியமால் என்பவர், இருசக்கர வாகனத்தில் 13 கிலோ குட்கா கடத்தப்பட்டது தெரிய வந்தது. அவரை சோதனை செய்ததில் குட்கா விற்பனை செய்த 28,000 பணம் இருந்தது.
அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை கடத்தி வந்த குற்றத்துக்காக சிந்துபட்டி போலீசார் கரியமாலை கைது செய்து அவரிடம் இருந்து பதிமூன்று கிலோ குட்கா பறிமுதல் செய்து, பணத்தையும் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.