மதுரை அருகே புகையிலை பதுக்கி வைத்த 3 நபர்கள் கைது

மதுரை மாவட்டம் சாப்டூரில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2022-03-28 04:45 GMT

கைதான மூவர். 

மதுரை சரகத்தில் போதைப்பொருட்களை கட்டுப்படுத்த தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மதுரை சரக காவல்துறை துணை தலைவரது தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில்,  ஶ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த அருண்பாண்டியன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்,  அவர் தன் நண்பர்களுடன் புகையிலைப் பொருட்களை மதுரை மாவட்டத்தில் சாப்டூர் பகுதியில் ஒரு தோட்டத்தில் பதுக்கி வைத்திருப்பதாக வாக்குமூலம் கொடுத்தார். அதன் அடிப்படையில் தனிப்படையினர் சோதனை செய்து, சட்டத்திற்குப் புறம்பாக புகையிலைப் பொருட்களை பதுக்கி்வைத்திருந்த மணிகண்டன் (33), முத்துகுமார் (25), அருண்பாண்டியன் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டுனர். அவர்களிடம் இருந்து புகையிலைப் பொருட்கள் 1872கிலோ இதன் மதிப்பு ( ரூபாய் 30 லட்சம்) மற்றும் இரண்டு கார் மற்றும் ஒரு சரக்கு வாகனம் உட்பட 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

Similar News