திருமங்கலம் ஊரக வளர்ச்சி ஊராட்சித் துறை ஓய்வூதியர் சங்க ஆலோசனைக்கூட்டம்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஓய்வூதியர்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதி அனைத்தையும் உடனடியாக நிறைவேற்றி தரவேண்டும்
இக்கூட்டத்தில் பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது. ஊரக வளர்ச்சித்துறை ஓய்வு பெற்றோர் களின் மீதான குற்றச்சாட்டுகளை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர ஓய்வூதிய பலன்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
முன்னாள் அரசு ஊழியர்கள் சங்க மாநிலத் தலைவர் எம சுப்பிரமணியன் என்பவர் மீது உள்ள குற்றச்சாட்டுகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் புதியதாக பேருந்து நிலையம், அமைத்தல் ,விடத்தகுளம் வழி விமான நிலையம் செல்லும் சாலை ரயில்வே மேம்பாலம், மற்றும் திருமங்கலம் நகர் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் அனைத்தையும் சரி செய்து தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஓய்வூதியர்கள் அனைவருக்கும் தேர்தல் வாக்குறுதி கொடுத்த அனைத்தையும் உடனடியாக நிறைவேற்றி தரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்துக்கு, பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் தினகர்சாமி, திருமங்கலம் கோட்ட துணைத்தலைவர் சோமு, பொருளாளர் பாதுஷா, மூத்த உறுப்பினர்கள் நடராஜன் ஜெயராமன் கண்ணன், ஜெயராமன் சோலைமலை மற்றும் அனைத்து ஓய்வூதியர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்