திருமங்கலம் நகராட்சி 5 மற்றும் 6வது வார்டு திமுக வேட்பாளர்கள் பிரசாரம்.

திருமங்கலம் நகராட்சி 5 வது வார்டு திமுக வேட்பாளர் ரம்யாமுத்துகுமார் 6 வது வார்டு வேட்பாளர் திருக்குமார் பிரசாரம்;

Update: 2022-02-15 01:00 GMT

வாக்கு கேட்டு சென்ற பொழுது 5வது வார்டு, 6வது வார்டு பொதுமக்கள் வேட்பாளர்களுக்கு ஆரத்தி எடுத்தும், மாலை மரியாதை செய்து வரவேற்பளித்தனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி 6வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் ம். ரம்யா முத்துக்குமார் மற்றும், 5 வது வார்டில் நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆர்.திருக்குமார்  சேர்ந்து அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது வாக்கு கேட்டு சென்ற பொழுது 5வது வார்டு, 6வது வார்டு பொதுமக்கள் வேட்பாளர்களுக்கு ஆரத்தி எடுத்தும், மாலை மரியாதை செய்து வரவேற்பளித்தனர்.

எம்.. ரம்யா முத்துக்குமார் மற்றும் ஆர்.திருக்குமார் பொதுமக்களின் காலில் விழுந்து பிரச்சாரம் மேற்கொண்டனர். மேலும் இப்பகுதியில் சாலை வசதி, குடிநீர் வசதி, பாதாள சாக்கடை வசதி, இ -சேவை மையம், தமிழக அரசு பொதுமக்களுக்கு வழங்கும் அனைத்து திட்டங்களையும் பெற்றுத் தருவதாகவும், குறைதீர்ப்பு மையம் அமைப்பது போன்ற பல்வேறு வாக்குறுதிகளை 5வது, 6வது வார்டு உட்பட்ட பொதுமக்களிடம் கூறி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். உடன் ஆர். முத்துக்குமார், ஆதிதிராவிட நல அமைப்பு பொட்டு தங்கபாண்டி, அழகர், அஜய் கண்ணன், திமுக இளைஞர் அணியினர் ,மற்றும் திமுக மகளிர் அணியினர், மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் உடன் சென்று  தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.

Tags:    

Similar News