திருமங்கலம் நகராட்சி 17வது வார்டு திமுக வேட்பாளர் ராஜம்மாள் அம்சராஜ் பிரசாரம்
திருமங்கலம் நகராட்சி 17வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு அ.ராஜம்மாள்அம்சராஜ் திமுக சார்பில் போட்டியிடுகிறார்.;
மதுரை மாவட்டம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி 17வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு திமுக கட்சி சார்பில் திருமதி.அ. ராஜம்மாள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். இவரது கணவர் அம்சராஜ் இவர் கடந்த 20 ஆண்டுகளாக திராவிட முன்னேற்ற கழகத்தின் சாதாரண உறுப்பினராக இருந்து வருகிறார்.
சாதாரண உறுப்பினராக இருந்தும் இப்பகுதியில் மின்விளக்கு எரியா விட்டாலும், குப்பைகள் தேங்கி கிடந்தாலும் ,தண்ணீர் இல்லாதபோதும் மக்களுக்காக தனிமனிதனாக போராடி இப்பகுதிக்கு அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து வருகிறார்.
இவரது மனைவி அ.ராஜம்மாள் அம்சராஜ் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் . இவரது கணவரும் ஏழ்மை நிலையில் வாழ்ந்து வருகின்றனர். .இந்நிலையிலும் கொரோனா ஊரடங்கு காலங்களில் இப்பகுதி மக்களுக்கு கபசுரக் குடிநீர், உணவுகள் மேலும் தங்களால் இயன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை திருமங்கலம் நகர் பகுதி மக்களுக்கும் அவர் வசித்து வரும் 17வது வார்டு பகுதிகள் தன்னால் இயன்றதை செய்து வந்தனர் .
இவர்களது மக்கள் சேவையை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் ஆணைகிணங்க திமுக மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மு.மணிமாறன் அவர்கள் தற்போது நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் 17வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வாய்ப்பினை வழங்கப்பட்டுள்ளது.தற்பொழுது குடிநீர் சுத்தமில்லாமல் வருவதை அறிந்து தனது சொந்த முயற்சியில் தற்பொழுது நீர் குழாய்கள் சுத்தப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகிறார்.
திருமங்கலம் நகராட்சி 17வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த அ.ராஜம்மாள் அம்சராஜ் தன்னை வெற்றிபெறச் செய்தால் ,அனைத்து தெருக்களுக்கும் ஆழ்துளை மின்மோட்டார் அமைத்து, சின்டெக்ஸ் தொட்டி அமைத்து தண்ணீர் வசதி செய்து தருவதாகவும் ,பாதாள சாக்கடை வசதி செய்து தருவதாகவும், தமிழக அரசு வழங்க கூடிய நலத்திட்டங்கள் அனைத்தும் வார்டு மக்களுக்கு முழுமையாக பெற்றுத்தருவதாகவும், அனைத்து தெருக்களுக்கும் மின் விளக்கு இல்லாத நிலையை உருவாக்கித் தரப்படும், மேலும் குண்டும் குழியுமான சாலைகள் அனைத்தையும் பேவர் பிளாக் தளம் அமைத்தல், தினமும் கொசு தொல்லையால் நோய்வாய்ப்பட்டு அவதிப்பட்டு வரும் நிலையில், இதற்கு மாற்றாக தினமும் கொசு மருந்து தான் சொந்த முயற்சியில் கொசு மருந்து அடிப்பது போன்ற பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வாக்கு கேட்டு வீடு வீடாக சென்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை காலில் விழுந்து அ.ராஜம்மாள் அம்சராஜ் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு வருகிறார்.
மேலும் திருமங்கலம் பகுதியில் தொடர் கொள்ளை சம்பவம் நடைபெறும் நிலையில் பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு, தனது குடும்பமாக நினைத்து, அவர்கள் நலனில் அக்கறை கொண்டு அனைத்து தெருக்களுக்கும் கண்காணிப்பு கேமரா பொருத்தி தருவதாகவும், இப்பகுதியில் குறைதரப்பு முகாம் மையம் அமைப்பதாகவும் வாக்குறுதி கொடுத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் .
கடந்த 20 ஆண்டுகளாக அ.ராஜம்மாள் அம்சராஜ் அவர்களின் கணவரின் செயல்பாட்டினை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர். 17 வது வார்டு பகுதி மக்கள் தங்களுடைய வாக்குகளை அ.ராஜம்மாள் அம்சராஜ் அவர்களுக்கு வாக்களிப்பதாக உறுதி அளித்து வருகின்றனர்.ஏழைகளின் கஷ்டம் அறிந்த ஏழை குடும்பத்தில் உள்ள ஒருவர் வேட்பாளராக வருவதை ஆதரிக்கிறோம் என 17வது வார்டு வாக்காளர் பொதுமக்கள் கூறியுள்ளனர்.
வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் அ.ராஜம்மாள் அமசராஜ் அவர்களுக்கு மதுரை திமுக தெற்கு மாவட்ட செயலாளர் மு.மணிமாறன் மற்றும் செயறகுழு உறுப்பினர் ஏர்போர்ட் பாண்டியன், கீழக்குயில்குடி செல்வேந்திரன், திருமங்கலம் நகர செயலாளர் மு.சி.சோ.முருகன், முன்னாள் கவுன்சிலர் அழகர் உள்ளிட்டோர் இவர்களுக்கு ஆதரவாக நடைபயணமாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திருமங்கலம் நகராட்சி 17வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் தேர்ந்தெடுக்க திருமதி .ராஜம்மாள் அம்சராஜ் அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றார்.