திருமங்கலம் தேவர் திடல் முன் அ.தி.மு.க. வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் தேவர் திடல் முன்பு அ.தி.மு.க. வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.;
அ.தி.மு.க. பொதுக்குழு நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனை தொடர்ந்து அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடந்து வருகிறது. மேலும் இடைக்கால அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதனை தொடர்ந்துதிருமங்கலம் வழக்கறிஞர் பிரிவு முத்துராஜா , வெங்கடேஷ்வரன், காளி, நிர்வாகிகள் ஓம்பிரகாஷ், கரிகாலன் ஆகியோர் திருமங்கலம் தேவர் திடல் முன்பு பட்டாசு வெடித்து பொதுமக்களை இனிப்பு வழங்கி கொண்டாடினர்.