திருமங்கலம்: திமுக வேட்பாளர்களுக்கு காணொளியில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்

வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் மு .க .ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நடத்திய பிரசாரத்தில் ஆயிரம் பேர் பங்கேற்று;

Update: 2022-02-15 02:00 GMT

 திருமங்கலம் நகராட்சி நகர்மன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பிரசார உரையாற்றி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் நகராட்சி நகர்மன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின்  காணொலி காட்சி மூலம் பிரசார உரையாற்றி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

திருமங்கலம் நகராட்சி நகர் மன்ற் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் 5வது வார்டு ஆர். திருக்குமார் ,6வது வார்டு ரம்யா முத்துக்குமார், 4வது வார்டு ஜஸ்டின் திரவியம், 12வது வார்டு மங்களகௌரி திமுக வேட்பாளர் ஆகியோர்களை ஆதரித்து தமிழக முதல்வர்  மு.க. ஸ்டாலின்,  காணொலி காட்சி மூலம் திமுக ஆட்சியின் போது செய்த சாதனை திட்டங்கள், மேம்பாலங்கள் அமைத்தல், போன்ற மக்களுக்கான உதவிகளை நினைவுபடுத்தி காணொலி காட்சி மூலம் பிரச்சார உரையாற்றினார்.



திருமங்கலம் நகரில் கக்கன் காலனி காளியம்மன் கோவில் திடலில் காணொளிக்காட்சி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருமங்கலம் நகராட்சி முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் சிவமுருக,ன் ஒன்றிய அவைத்தலைவர் கப்பலூர் சந்திரன், மற்றும் முத்துக்குமார் ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

மேலும் திமுக மகளிரணியினர் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தமிழக முதல்வர் மு.க .ஸ்டாலின் காணொளி காட்சி பிரச்சார உரையை கேட்க ஆர்வத்துடன் பங்கேற்றனர்.மேலும் இக்கூட்டத்தில் திமுக முக்கிய நிர்வாகிகள், இளைஞர் அணியினர், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News