திருமங்கலம் அருகே பேருந்து மோதி விபத்து; ஒருவர் உயிரிழப்பு
திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி பகுதியில் பேருந்தை முந்திச் செல்ல முற்பட்ட பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
கோவையில் இருந்து சிவகாசிக்கு அரசு பேருந்தை ஓட்டுநர் ராமசாமி (53) ஓட்டிச் சென்றார். திருமங்கலம் அருகே ஆவல்சூரன்பட்டி நான்கு வழிச்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, சென்னையில் இருந்து திருநெல்வேலி சென்ற தனியார் ஆம்னி பேருந்து, அரசுப் பேருந்தை முந்த முயன்றபோது பக்கவாட்டில் மோதி விபத்துக்குள்ளானது .
இதில் சென்னை மாத்தூர் பகுதியைச் சேர்ந்த மைக்கேல் ஸ்டீபன் (42), தனியார் பேருந்தில் இருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். தகவலறிந்த கள்ளிக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த மைக்கேல் ஸ்டீபனை 108 ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே மைக்கேல் ஸ்டீபன் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கள்ளிக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.