திருமங்கலம் அருகே வங்கி சுவர் இடிந்து விழுந்து காவலாளி படுகாயம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடியில் மத்திய கூட்டுறவு வங்கி மேற்கூரை இடிந்து விழுந்து காவலாளி படுகாயம்.;

Update: 2022-06-20 15:09 GMT

இடிந்து விழுந்த வங்கியின் மேற்புற தாழ்வாரச்சுவர்.

திருமங்கலம் அருகே வங்கியின் வாயிலில் மேற்புற தாழ்வாரச்சுவர் திடீரென இடிந்து விழுந்ததில் காவலாளி படுகாயம். (அதிகாலை என்பதால் வங்கி வாடிக்கையாளர்கள் எவரும் வரவில்லை - பெரும் விபத்து தவிர்ப்பு)

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடியில் உள்ள மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளையில், இன்று அதிகாலை வங்கி நுழைவு வாயிலில் உள்ள மேற்புற தாழ்வரச் சுவர் முழுவதுமாக சரிந்துகீழே திடீரென சரிந்து விழுந்தது விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் வங்கி காவலாளி ராமசந்திரன் (72) காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த காவலாளியை அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். வங்கியின் கட்டிடம் மிகப்பழமையான கட்டிடம் என்பதாலும், இருதினங்களாக பெய்த மழையினாலும் தாழ்வாரச் சுவர் முழுவதும் ஈரப்பதம் ஏற்பட்டு வலுவிழந்ததாக கூறப்படுகிறது. வங்கி பணி நேரம் இல்லாததால் பெறும் அசம்பாவிதம் தவிர்ப்பு. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News