லாரி மோதி காயமடைந்த தந்தை மூன்று மகன்கள் மருத்துவமனையில் அனுமதி
பழனி பாத யாத்திரைக்கு செல்ல இருந்த தந்தை - மூன்று மகன்கள் லாரி மோதி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
திமுக முக்கிய புள்ளியின் குவாரி லாரிகளின் அதிவேகத்தில் கோயிலுக்கு சென்ற தந்தை மூன்று மகன்கள் விபத்துக்குள்ளாகி பலத்த காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த வலையங்குளம் பகுதியில் திமுகவின் முக்கிய புள்ளிக்கு மட்டுமே அரசு அனுமதியுடன் குவாரிகளில் மணல் அள்ள அனுமதி உள்ளது. என்று இப்பகுதியில் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று வளையம்குளத்தை சேர்ந்த பாண்டி (42). இவரது மகன் மதன், ஜெகன், விக்னேஷ், பழனி பாதயாத்திரை மாலை போட்டுள்ளனர். இந்நிலையில், இன்று பாதயாத்திரை கிளம்பும் நிலையில், குல தெய்வமான காமாட்சி அம்மன் கோவிலை தரிசனம் செய்து கிளம்பும்போது, அப்பகுதியிலிருந்து திமுகவின் முக்கிய புள்ளி குவாரியில் இருந்து மண் ஏற்ற சென்ற டிப்பர் லாரி தந்தை மகன்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில், தந்தை கால் முறிவு ஏற்பட்டது. மேலும் மூன்று மகன்களுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து, அப்பகுதி மக்கள் அவ்வழியாக லாரிகளை விடாமல் சாலை மறியலில் ஈடுபட்டனர். கூடக்கோவில் போலீஸார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஏற்கெனவே இதனை போல் மூன்று முறை விபத்து நடந்தது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில் இன்று மீண்டும் தந்தை மகன்கள் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.