ஒரு வருடத்திற்கு மேலாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த பிரபல கொள்ளையன் கைது
நகர் பகுதியில் கொள்ளையடித்து ஓராண்டாக காவல்துறையிடம் சிக்காமல் இருந்த பிரபல கொள்ளையனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.;
மதுரை மாவட்டம், திருமங்கலம் நகர் பகுதியில் 2020ஆம் ஆண்டு கொள்ளையடித்த கொள்ளையனை தனிப்படையின் தீவிர முயற்சியால் கண்டுபிடிக்கப்பட்டது.
இலங்கை உச்சப்பட்டி அகதி முகாமைச் சேர்ந்த முனியாண்டி மகன் கேத்தீஸ்வரன் என்ற சந்திரகுமார் (34/ 22) என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் திருமங்கலம் உட்கோட்டம் திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் தாக்கலான கன்ன களவு வழக்குகளில சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது.
கன்னக்களவு வழக்குகளில் சம்பவ இடங்களை கைவிரல் ரேகை நிபுணர்கள் ஆய்வு செய்து சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட கைவிரல் ரேகை மாதிரிகளை சந்திரகுமார் கைரேகையுடன் ஒப்பீடு செய்ததில் கை ரேகை ஒத்துபோனது.
பின்னர் அந்த நபரிடம் நடத்திய விசாரணையில் 3 மேலும் வழக்குகளில் தொடர்பு உள்ளது தெரியவந்தது. அவரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட சொத்துகள் கைப்பற்றப்பட்டு சந்திரகுமார் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தபட உள்ளனர்.
மேற்படி நான்கு வழக்குகளில் களவுபோன சுமார் 60 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது.வழக்குகளில் புலன் விசாரணை மேற்கொண்டு சந்திரகுமாரையும், களவுபோன சொத்துக்களையும் கைப்பற்றிய தனிப்படையினரை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ. பாஸ்கரன் பாராட்டினார்.