திருமங்கலம் அருகே இருசக்கர வாகன விபத்தில் மாணவர் பலி
மதுரை செக்கானூரணி பகுதியில் நடந்த இரு சக்கர வாகன விபத்தில், மாணவர் உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த செக்கானூரணி சேர்ந்தவர் கண்ணன்; அவரது மகன் பிரவீன் குகன் வயது ( 17 ) அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பிரவீன் குகன், இரு சக்கர வாகனத்தில் தேங்கில்பட்டி அருகே சென்றபோது பழுதாகி, நின்று கொண்டிருந்த வேனில் மோதி தூக்கி வீசப்பட்டார் .இதில் பலத்த காயமடைந்த பிரவின் குகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து செக்கானூரணி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவரின் உடலை கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்கு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இச்சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.