பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து நூதன முறையில் போராட்டம்
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பெட்ரோல், டீசல்,கியாஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் இராஜாஜி சிலை முன்பு பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் அம்மாபட்டி பாண்டி தலைமையில் இன்று நூதன முறையில் போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் மதுரை மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர் எஸ். தேன்மொழி, மாவட்ட துணைத்தலைவர் உசிலை மகேந்திரன், மற்றும் மாவட்ட துணை தலைவர் முத்துப்பாண்டி, மாநில பொதுக்குழு மகேந்திரன், ராஜ்குமார், சுப்பிரமணி மற்றும் வட்ட தலைவர்கள் .வீரபத்ரன், சேகர் ஆனந்த், அமுதா சரவணன் கவுன்சிலர் மற்றும் அவனியாபுரம் மட்டத் தலைவர்கள் கஜேந்திரன், ராமசாமி, பாபு, நல்லதம்பி ,மற்றும் பகுதி தலைவர்கள் நாகேஸ்வரன், வேல்முருகன், கஜேந்திரன், கலந்துகொண்டனர்.
மேலும் இப்போராட்டத்தை இளைஞரணி காங்கிரஸ் தொகுதி தலைவர் சௌந்திரபாண்டியன் ,மற்றும் ராஜா தேசிங் முன்னிலை வகித்து நடத்தினர். இப்போராட்டத்தில் இருசக்கர வாகனத்திற்கு கேஸ் சிலிண்டருக்கும் இருசக்கர வாகனத்திற்கும் மாலை அணிவித்து விலை உயர்வை குறைக்க கோரி கோஷம் எழுப்பினர்.