திருமங்கலம் நகராட்சி 13வது வார்டில் சர்மிளா விசாகன் திமுக சார்பில் போட்டி

திருமங்கலம் நகராட்சி 13வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் சர்மிளா விசாகன் தீவிர வாக்கு சேகரிப்பு;

Update: 2022-02-10 16:15 GMT

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி நகர் மன்றத் தேர்தல் 13வது வார்டு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில்  சமூக ஆர்வலரான சர்மிளா விசாகன் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

 .திமுக நகர செயலாளர் மு.சி.சோ முருகன்  சமூக அக்கறையை கருத்தில் கொண்டு தனது மகனுக்கு திருமணம் செய்து வைத்தார். இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திருமங்கலம் நகராட்சி 13 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் சர்மிிளா விசாகன போட்டியிடுகிறார்.

மு.சி. சோ முருகன் 1986 வருடத்திற்கு முன்பு பேரூராட்சியாக இருந்த திருமங்கலம் பேருராட்சி நகராட்சியாக மாற்றம் செய்யப்பட்டது மு.சி.சோ முருகன் தந்தை இராமசாமி  தேவர்,மேலும் ரத்தினசாமி தேவர் ஆகியோர் 1986 க்கு பின்பு நகராட்சியாக மாற்றம் செய்த பின்னர் பல முறைநகர்மன்ற தலைவராக பொறுப்பு வகித்து வந்தனர். இதனைத்தடர்ந்து மு.சி சோ முருகனின் மூத்த சகோதரர் அதியமான்  இரண்டு முறை திருமங்கலம் நகர் மன்ற தலைவராகவும் எம்எல்ஏ -ஆகவும் பதவி வகித்தவர். இவர்கள் வழியில் வந்த  மு.சி.சோ. முருகன்  அரசியலில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வருகிறார்.

திராவிட முன்னேற்ற கழகத்தில்  இவர் பெரும் பங்களித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் மு .க .ஸ்டாலின்  ஆணைக்கிணங்க, மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மு.மணிமாறன் சர்மிளா விசாகன்  திருமங்கலம் நகர்மன்ற 13வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வாய்ப்பினை வழங்கியுள்ளார்..

திமுகவின் சாதனை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் அனைத்தையும் எடுத்துக்கூறி   13வது வார்டுக்கு உட்பட்ட முன்சீப கோர்ட் ரோடு, வெங்கட சாஸ்திரி சந்து ஆகிய பகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். 

 திருமங்கலம் நகராட்சிக்கு இருபத்தி ஏழு வார்டுகள் உள்ளன . இதில் 27 வார்டுகளும்  திமுக வெற்றியடந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் 13வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் டி. சர்மிளா விசாகன்  நகர்மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற  கூறப்படுகிறது.  13வது வார்டு பகுதியில் மற்றும் திருமங்கலம் அனைத்து நகர்ப்புற பகுதிகளிலும் திருமங்கலம் நகர் பகுதியில் அதிக குற்ற சம்பவங்கள் நடக்கும் நிலையை கருத்தில் கொண்டு 13வது வார்டு பகுதி மற்றும் திருமங்கலம் நகர் பகுதி வீதிகள் அனைத்திலும் மக்களின் நலன் கருதி கண்காணிப்பு கேமரா அமைத்து தரப்படும் என வாக்குறுதி அளித்து வருகிறார்.

மேலும் தமிழக அரசு சார்பில் வரக்கூடிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் சேரக்கூடிய ஏழை பயனாளிகளுக்கு முறையாக பெற்று தருவதாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் . மேலும் ஆழ்துளை கிணறு மின்னியக்க குடிநீர் வசதி, மின் விளக்கு இல்லாத பகுதிகள் அனைத்திலும மின் விளக்கு அமைத்தல் ,குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகள் அனைத்தையும் சீரமைத்து பேவர் பிளாக் கல்சாலை அமைத்து தருவதாகவும் வாக்குறுதி கொடுத்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

மேலும் திமுக 27 வார்டு நகர்மன்ற உறுப்பினர்கள் சர்மிிளா விசாகன்  நகர் மன்ற தலைவராக தேர்ந்தெடுக்க முடிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து  13வது வார்டு பகுதி மக்கள் மு .சி .சோ. முருகன் தந்தை மற்றும் அவரது உடன் பிறந்த சகோதரர் ஆகியோர் திருமங்கலம் நகராட்சி நகர் மன்ற தலைவராக பதவி வகித்த போது திருமங்கலம் நகர் பகுதியை ஏழை எளிய மக்களுக்கும் எந்த குறையுமின்றி அனைத்து வசதிகளையும் அடிப்படை வசதிகளையும் பூர்த்தி செய் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றுள்ளனர். இந்நிலையில் அவரது வாரிசு தற்பொழுது வேட்பாளராக நிற்பது அனைத்துத்தரப்பினரின் வரவேற்பைப்பெற்றுள்ளது. 


Tags:    

Similar News