கேரளாவிற்கு கடத்தி சென்ற ரேஷன் அரிசி பறிமுதல்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கூட கோவில் சாலையில் கேரளாவிற்கு கடத்தி சென்ற ரேஷன் அரிசியை போலீஸார் பறிமுதல் செய்தனர்;
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கூடக்கோவில் சாலையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் 50 கிலோ எடையுள்ள 100 மூட்டைகளில் 5 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லாரியை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டபோது விருதுநகர் மாவட்டம் கூரைகுண்டு பகுதியை சேர்ந்த அரிசி ஆலை உரிமையாளர் மாரிக்கண்ணு மற்றும் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் கேரள மாநிலத்திற்கு கடத்த இருப்பதாக தகவல் தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து விசாரணை அடிப்படையில் லாரி மற்றம் 5 ஆயிரம் கிலோ அரிசியை பறிமுதல் செய்து மாரிக்கண்ணு, ரவிசந்திரன் இருவரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரேஷன் அரிசி கடத்தல் சம்பவம் இப்பகுதி மக்களிடையே பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.