சிதிலம் அடைந்த பள்ளி கட்டடத்தை சீரமைத்து தரக்கோரி சாலை மறியல்

மதுரை திருமங்கலம் அருகே கீழ உரப்பனூர் கிராமத்தில் சிதிலமடைந்த துவக்கப் பள்ளி கட்டடத்தை சீரமைத்து தர கோரி பொதுமக்கள் சாலை மறியல்

Update: 2021-10-31 05:15 GMT

பள்ளி கட்டடத்தை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

மதுரை  மாவட்டம் திருமங்கலம் அருகே கீழ உரப்பனூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் கட்டிடம் மேற்பகுதி மற்றும் சுற்றுப்புற பகுதிகள் அனைத்தும் விரிசல் விழுந்த நிலையில் , மழைநீர் தேங்குவதால், தண்ணீர் ஒழுகி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பின்மை ஏற்படுவதுடன், உயிர்ச்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளதாக கிராம மக்கள் கூறுகின்றனர், 

இதுகுறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடமும் , கல்வித்துறையினரிடமும் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளததால், திருமங்கலம் - உசிலம்பட்டி சாலையில் கிராம மக்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

இந்த  பள்ளி கட்டிடம் தான் வாக்குச்சாவடி மையமாக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News