திருமங்கலம் நகராட்சி தேர்தலில் மறு வாக்கு பதிவு: அதிமுக வெற்றி
திருமங்கலம் நகராட்சி தேர்தலில் மறு வாக்கு பதிவு நடந்த 17 வது வார்டில் அதிமுக வெற்றி பெற்றது;
மாவட்டம் திருமங்கலம் நகராட்சி தேர்தலில் 17வது வார்டு பதவிக்கு போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் முன்னாள் நகர்மன்றத் தலைவர் உமா விஜயன் அவர்கள் வெற்றி பெற்றார். திருமங்கலம் நகராட்சி தேர்தலில் மொத்தம் 27 வார்டுகள் வாக்குப்பதிவின் போது 17வது வார்டில் கையொப்பம் இடாமல் வாக்காளர்கள் வாக்களித்ததாக திமுகவினர் குற்றச்சாட்டி வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. பின்னர் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் படுதோல்வியை சந்தித்தார். அதிமுக வேட்பாளர் முன்னாள் நகர்மன்றத் தலைவர் உமா விஜயன் வெற்றிபெற்றார்.