கோவில்பட்டி - துலுக்கப்பட்டி இரட்டை ரயில் பாதை: ஆணையர் ஆய்வு
கோவில்பட்டி - துலுக்கப்பட்டி புதிய இரட்டை அகல ரயில் பாதையை, தென்னக சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய், இன்று ஆய்வு செய்கிறார்.;
மதுரை கோவில்பட்டி -துலுக்கப்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே அமைக்கப்பட்டுள்ள புதிய இரட்டை அகல ரயில் பாதையில், இன்று தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய் ஆய்வு செய்கிறார்.
கோவில்பட்டியில் இருந்து காலை 8:30 மணிக்கு மோட்டார் டிராலி மூலம் ஆய்வைத் துவக்கி, மதியம் 12.30 மணிக்கு சாத்தூர் நிலையத்தில் நிறைவு செய்ய இருக்கிறார். பின்பு சாத்தூரில் இருந்து மதியம் 12.45 மணியிலிருந்து மதியம் 1.15 வரை கோவில்பட்டி வெளிப்புற பகுதி வரை ரயில் வேக சோதனை ஓட்டம் நடத்த இருக்கிறார்.
மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை, சாத்தூர் ரயில் நிலையங்களுக்கு இடையே மோட்டார் டிராலி மூலம் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார். பின்பு மாலை சாத்தூர் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் அதிவேக சோதனை ஓட்டம் நடத்தி ஆய்வு செய்கிறார். எனவே ரயில் வேக சோதனை ஓட்டம் நடைபெறும் பகுதியில் உள்ள பொதுமக்கள் ரயில் பாதையை கடக்க வேண்டாம் என ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.