மகளிர் குழு கூட்டமைப்பினருக்கு தொழில் கடன் மற்றும் தோட்டப்பயிர் விதைகள் வழங்கல்
திருமங்கலம் அருகே மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் குழு கூட்டமைப்புக்கு வங்கிக்கடன் வழங்கும் விழா நடைபெற்றது.;
விடத்தகுளம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்க்கு தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் வங்கி பெருங் கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட விடத்தகுளம் ஊராட்சி மகளிர் குழு கூட்டமைப்பு சார்பில் வங்கி பெருங்கடனுக்கான காசோலை மற்றும் ஊட்டச்சத்துமிக்க காய்கறி விதைகள் வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், விடத்தகுளம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்க்கு தமிழ் நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குனர் காளிதாசன் மற்றும் ஏ.டி.பி வங்கி மேலாளர் சுந்தரவடிவேல் இணைந்து மகளிர் குழுவினருக்கு வங்கி பெருங்கடன் ரூ 45.50 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்கள்.
உதவி திட்ட அலுவலர் மரியாமதேலம்மாள், தோட்டக்கலை உதவி இயக்குனர் சி. பிரபா, கூட்டமைப்பின் உறுப்பினர் அனைவருக்கும் ஊட்டசத்து தோட்டம் மற்றும் விதைகள் வழங்கப்பட்டது. இதில், வட்டார இயக்கம் மேலாளர் வி. பாக்கியம் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் சந்தியா, ரேணுகா, குமுதா,அம்பிகா, பிரியா,சக்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.