திருமங்கலம் அருகே கஞ்சா வைத்திருந்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கஞ்சா 6 கிலோ வைத்தருந்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர்

Update: 2022-03-27 04:30 GMT

மதுரை அருகே போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பண்டல்

மதுரை மாவட்டம்  திருமங்கலம் அருகே செக்கனுரணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாயக்குருவமன்பட்டி ஏரியாவில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட தனிப்படையினர் மற்றும் காவலர்கள் சோதனையில் ஈடுபடும்போது சட்டத்திற்குப் புறம்பாக கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த 1) பாப்பாத்தி (48/22) W/O சின்னான் என்ற நபரை கைது செய்தனர்.

மேலும் இது சம்பந்தமாக செக்கானூரணி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு எதிரிகள் கைது செய்யப்பட்டனர் அவர்களிடமிருந்து கஞ்சா 6 Kg இதன் மதிப்பு ரூபாய் 75,000/- பறிமுதல் செய்தனர். மேலும் மதுரை மாவட்டத்தில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை ஈடுபடுவோர், பதுக்குவோர் மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி. பாஸ்கரன்  எச்சரித்துள்ளார்.

Tags:    

Similar News