பெரியார் நினைவு நாள்: உருவச்சிலைக்கு மதிமுகவினர் மலரஞ்சலி
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மதிமுக நகர செயலாளர் அனிதா பால்ராஜ் தலைமையில் மலரஞ்சலி செலுத்தினர்;
தந்தை பெரியாரின் 48.வது நினைவு நாளை முன்னிட்டுமதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு திருமங்கலம் நகர மதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திருமங்கலம் நகர மதிமுக நகர செயலாளர் அனிதா பால்ராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நகர துணை செயலாளர்கள் கணேசன், சௌந்தரபாண்டி, மாவட்ட பிரதிநிதி வையதுரை, சரவணன், விவசாயிகள் அணி செயலாளர் ரமேஷ், துணை செயலாளர் சிவனாண்டி, இளைஞர் அணிசெயலாளர் ஜெயபால் மற்றும் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர் .