பசும்பொன் தேவர் குருபூஜை விழாவை திருமங்கலம் தேவர்சிலைக்கு மரியாதை

திருமங்கலத்தில் பழமையான பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து அன்னதானம் வழங்கப்பட்டது;

Update: 2021-10-30 08:15 GMT

திருமங்கலத்தில் பழமையான பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்த நாச்சியார் குடும்பத்தினர்

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் இன்று பசும்பொன் தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு, சென்னை மத்திய மாவட்ட தகவல் தொழில்நுட்பப்பிரிவு மாவட்ட செயலாளர் ஜீவிதா நாச்சியார் மற்றும் பகவத் ராகுல் தேவர் சார்பாக மதுரை திருமங்கலத்தில் பழமையான பசும்பொன் முத்துராமலிங்க தேவர்  உருவச்சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி அன்னதானம் வழங்கப்பட்டது.

நாச்சியார் குழுமம் மாலை மரியாதை செய்ய வந்த நாச்சியார் குடும்பத்திற்கு, திருமங்கலம் நகர் பொது மக்களும் தேவர் சமுதாய மக்களும் வரவேற்பளித்தனர். மேலும், பொதுமக்களுக்கு நாச்சியார் இனிப்புகள் வழங்கி பொங்கல் பிரசாதங்கள் வழங்கி கொண்டாடினர்

Tags:    

Similar News