எதிர்கட்சியினர் குறை கூறுவதை விட்டு ஆலோசனை தந்தால் நல்லது: அமைச்சர் மூர்த்தி
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள அரசு ஹோமியோபதி மருத்துவ மனையில் ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை மூலம் 50 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி திறந்துவைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது,
தற்போது ஆக்சிஜன் இல்லை என்ற பேச்சுக்கே இடம் இல்லாதவாறு ஆக்சிஜன் பற்றாக் குறையைப் போக்கி அதிக அளவில் ஆக்சிஜன் கிடைக்கும் அளவிற்கு தமிழக முதல்வர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். ஆனால் அதிமுகவினர் ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளதாக பொய் பிரச்சாரம் செய்து அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் ஈடுபட்டு வருவதாகவும் , தற்போது மருத்துவர், செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளது. அதற்கு சென்ற அதிமுக ஆட்சிக்காலத்தில் அதற்கான பணி நியமனம் செய்யாத காரணத்தினாலும் அம்மா கிளினிக் என்ற பெயரில் சரியாக மருத்துவர்களை நியமனம் செய்யாமல் பெயர் அளவில் கிளினிக்குகளை திறந்துவைத்து வேஷம் போட்டு உள்ளதாக அதிமுகவினர் மீது அமைச்சர் மூர்த்தி குற்றம் சாட்டியதுடன் காழ்ப் புணர்ச்சியை விட்டு விட்டு குறை கூறுவதற்கு தற்போதைய நேரம் இது அல்ல எனவும் எதிர்க்கட்சியினர் குறை கூறுவதை விட்டுவிட்டு ஆலோசனையை தெரிவித்தால் நல்லது என்றும் கூறினார்.