திருமங்கலம் அருகே கிணற்றுக்குள் விழுந்து தாய், மகள் தற்கொலை

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட புதுப்பட்டியில், கிணற்றுக்குள் விழுந்து தாய்-மகள் தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2021-12-03 06:45 GMT

மதுரை திருமங்கலம் தாலுகா திருமால் புதுப்பட்டி பகுதியில் உள்ள கிணற்றில், மகேந்திரன் மனைவி மாரீஸ்வரி (26) இவர்களது மகள் கனிஷ்கா ஸ்ரீ (1) இருவரும் இன்று காலை கிணற்றில் விழுந்து உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள்,  சரகத்திற்கு உட்பட்ட கூடகோவில் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். 

தகவலின் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, திருமங்கலம் நகர் தீயணைப்பு துறை நிலை அலுவலர் குமார் தலைமையில், தாய் மகள் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு, அரசு மருத்துவமனையில் அனுமதித்து விசாரணை.மேற்கொண்டு வருகின்றனர். தாய் மகள் சாவில் மர்மம் ஏதும் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தனிப்படை அமைத்து விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News