பருத்திப்பால் மருத்துவ குணம்: மறக்காத மதுரை மக்கள்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நெஞ்சு சளி, இருமல் போன்ற நோய்களுக்கு தீர்வு காணும் பருத்திப்பால் வியாபாரம் அமோகம்;

Update: 2022-03-09 12:30 GMT

பருத்திப்பால் வியாபாரி

 மருத்துவ குணம் கொண்ட பழங்கால உணவு பருத்திப்பால்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் பகுதியில் மற்றும் மதுரை மாவட்டம் மற்றும் தமிழகம் அனைத்து இடங்களிலும் அதிகமாக பருத்திப் பால் வியாபாரம் நடைபெற்று வருகிறது.தற்போது உள்ள இளைஞர்கள் சிறு வயதிலேயே புகை பழக்கத்திற்கு அடிமையாகி நெஞ்சு தகை, இருமல், போன்ற நோய்களால் அவதிப்பட்டு வருகின்றனர் .

இதற்கு ஆங்கில  மருந்து எடுத்துக்கொண்டாலும் உடலிலுளள சளியினை வேரோடு அறுத்து எரியும் மருந்தாக நமது முன்னோர்கள் காலத்தில் வீட்டில் பாயாசம் செய்வதை போல் பருத்திப்பால் செய்து அனைவரும் அருந்தி வந்தனர்.முந்தைய காலத்தில் குளிர்ந்த காற்று, மழை நீரினால் ஏற்படும் நோய் சளியாக இருந்து வந்தது.அப்போது நமது மூதாதையர்கள் பருத்திபால் காய்ச்சி மருந்தாக  யன்படுத்தினர் .ஆனால் தற்பொழுது காலங்கள் மாறி தற்போதைய சந்ததியினர் புகைப் பழக்கம் அதிகமாக இருப்பதால் மேலும் இயற்கை சீற்றம் பணி காலங்கள், மழைக்காலங்கள் போன்ற காலங்களில் சளி அதிகமாகி உயிர் இழக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

இதற்கான சுவையான அருமருந்தாக பருத்திப்பால் உள்ளது. என்பதை வீட்டில் தயாரிப்பதை மறந்துவிட்டனர். இந்நிலை யில் ஒரு சில கிராமங்கள், நகர் பகுதியில் அனைத்து இடங்களிலும் பருத்திப் பால் வியாபாரம் துவங்கி விற்பனையில் வியாபாரிகள் இறங்கியுள்ளனர்.

பருத்தி பால் தயாரிக்கும் முறை பற்றி வியாபாரியிடம கேட்டபொழுது அவர் கூறியதாவது: .பருத்திப்பால் தயாரிக்க பச்சரிசியை ஊற வைத்து அரைத்து மாவு செய்து மேலும் பருத்திப்பால் விதை ,திப்பிலி ,சித்தரத்தை, ஏலக்காய்,கருப்பட்டி போன்ற நாட்டு மருந்துப் பொருள்களை சேர்த்து இதை காய்ச்சி விற்பனைக்கு கொண்டு வருவதாக கூறினார் .மேலும் இதன்  வியாபாரம் தற்போதைய சந்ததியர்கள் பருத்திபாலை விரும்பி அருந்தி வருவதாகவும் ஒரு டம்ளர் 20 ரூபாய் முதல் 25 வரை விற்பனை செய்வதாக கூறினார்.

பருத்திப்பால் பிரியர் முன்னாள் ராணுவ வீரர் ராஜேந்திரன் கூறியதாவது: பருத்திப்பால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான ஒரு சுவையான மருந்தாகும். இதனை குழந்தைகளும் கருப்பட்டி கலந்து சுவையாக காய்ச்சுவதால் விரும்பி அருந்துவதாக கூறினார். மேலும் இதனுடைய மகத்துவம் எப்படிப்பட்ட சளி நோய்களில் இருந்து விடுபடலாம் என்றார்.

ஆனல் தற்போது இதை வீட்டில் காய்ச்ச பெண்கள பருத்திப்பாலின் மகத்துவம்  மருத்துவ குணம்  பருத்திப்பால் காய்ச்சும் பக்குவம் தெரியாமல் பருத்திப்பால் பயன்பாடு  மறைந்து வருவது வருத்தமளிப்பதாகவும் கூறினார் .இதனால் வேறு வழியின்றி கடைகளில் வந்து இதனை அருந்தி செல்வதாகவும் கூறினார். முந்தைய காலத்தில் மாலை நேரங்களில் பருத்தி பால் காய்ச்சி அருந்தி வந்தனர்.ஆனால் தற்போது பெண்கள் யாரும் இம் முறையை கடைபிடிப்பது இல்லை. பருத்தி பாலின் மருத்துவ குணம் பற்றி தெரிந்தவர்கள் வெளியில் பருத்திப் பால் வியாபாரிகளிடம் அருந்தி வருகின்றனர். பருத்தி பால் அனைவரும் அருந்தி வருவது மிகவும் நன்மையளிக்கும் மருந்தாகும் என்றார் அவர்.

Tags:    

Similar News