மதுரை தெற்கு மாவட்ட திமுக உள்கட்சித் தேர்தல்: நிர்வாகிகள் விருப்ப மனுக்கள்
திமுக தெற்கு மாவட்ட திருமங்கலம் அலுவலகத்தில் மாவட்டசெயலாளர் மு.மணிமாறன் முன்னிலையில் விருப்ப மனுக்களை பெற்றுசென்றனர்;
மதுரை தெற்கு மாவட்டத்தில் திமுக நகர பேரூர் வார்டு தேர்தல் விருப்ப மனு தாக்கல் நிகழ்வு நடைபெற்றது. மதுரை தெற்கு மாவட்டத்தில் உள்ள நகர பேரூர் வார்டு கழக தேர்தல் 22ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரையில் நடைபெற உள்ள நிலையில் திமுக மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மு.மணிமாறன், திருமங்கலம் நகராட்சி, உசிலம்பட்டி நகராட்சி, பேரையூர் , எழுமலை, டி. கல்லுப்பட்டி ஆகிய பேரூராட்சிகளுக்கு தேர்தல் விருப்ப மனுக்களை மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மு.மணிமாறன் மனுக்களை பெற்றுச் சென்றனர்.
இந்நிகழ்வில் திருமங்கலம் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் லதா அதியமான், திருமங்கலம் சேர்மன் ரம்யா முத்துக்குமார், துணை சேர்மன் ஆதவன் அதியமான், சிவமுருகன், அவைத்தலைவர் நாகராஜ், பொடா நாகராஜ், மு.சி.சோ.பா. ஸ்ரீதர், மாவட்ட இளைஞரணி செயலாளர் மதன்குமார், திருமங்கலம் கவுன்சிலர்கள் திருக்குமார், ஜஸ்டின் திரவியம், வீரகுமார் காசி பாண்டி, சின்னசாமி, இளைஞரணி அமைப்பாளர்கள் கௌதம் , குட்டி பாலு, ஹரி, திமுக செந்தில், பி. வி.அஜய் கண்ணன் மற்றும் திமுக முக்கிய மாநில மாவட்ட நகர பேரூர் கழகத்தின் நிர்வாகிகள் மகளிர் அணியினர் பங்கேற்றனர்.