மதுரை: தாெடர் மணல் திருட்டில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது
பேரையூர் தாலுகா அணைக்கரைபட்டியை சேர்ந்த சின்னசாமி என்ற அன்வர்ராஜா மணல் திருட்டில் ஈடுபட்டதாக குண்டர் சட்டத்தில் கைது.;
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட பேரையூர் தாலுகா அணைக்கரை பற்றிய சேர்ந்த சின்னசாமி என்ற அன்வர்ராஜா இவர் மணல் திருட்டில் ஈடுபட்டதாக போலீசார் கைது செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து மணல் திருட்டில் ஈடுபட்டு வருவதால் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யவும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் அவர்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அணி சேகர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார்.
அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் அனீஸ்சேகர் பரிந்துரையை ஏற்று அன்வர் ராஜாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதனடிப்படையில பேரையூர் காவல் நிலைய போலீசார் அன்வர்ராஜாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.