பேரையூர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்ற 3 பேர் கைது
திருமங்கலம் அருகே பேரையூர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;
திருமங்கலம் தொகுதி பேரையூர் தாலுகா பகுதி சேடபட்டி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பதாக சேடபட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில், சேடபட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர்.
இதில், பெரிய வண்டாரியை சேர்ந்த ராமன் மனைவி முனியம்மாள் மற்றும் காலப்பன்பட்டியை சேர்ந்த கருத்த கண்ணன் மகன் மொக்கத்துறை வயது (50 ) முருகநேரியை சேர்ந்த பொன்னையா மகன் கிருஷ்ணமூர்த்தி ஆகிய மூன்று நபர்கள் சட்டவிரோதமாக மறுக்கப்பட்டதை சேடபட்டி போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். அவர்களிடம் இருந்து 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்து 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.