உத்தப்புரத்தில் போலீசார் மீது மதுபாட்டில் வீச்சு: காவலர் காயம், 2 பேர் கைது
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உத்தப்புரத்தில் போலீசார் மீது கல், மதுபாட்டில் வீச்சு 2 பேர் கைது.;
உத்தப்புரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பேரையூர் தாலுகாவை சேர்ந்த ஏழுமலை உத்தப்புரத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இக்கோவில் திருவிழாவையொட்டி உத்தப்புரம் பேருந்து நிலையம் அருகே அனுமதியின்றி ஒரு தரப்பினர் விளம்பர பதாகை வைத்துள்ளனர்.
இதனை அகற்றுமாறு ஊராட்சி மற்றும் வருவாய் துறை அதிகாரிகளிடம் மற்றொரு தரப்பினர் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து இரு தரப்பினரையும் அழைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும் செவ்வாய்க்கிழமை உத்தப்புரம் வழியே போலீசார் சென்றபோது போலீசார் மீது மர்ம நபர்கள் மது பாட்டில்களை வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காவலர்கள் காயமடைந்துள்ளனர். இதுதொடர்பாக போலீrtர் புதன்கிழமை அப்பகுதியை சேர்ந்த கருப்பு மற்றும் ஈஸ்வரனை கைது செய்தனர். அப்போது காவலர் பாண்டி மற்றும் சேகரை அப்பகுதியை சேர்ந்தவர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்து உசிலம்பட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் அறிந்த மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் பாஸ்கரன் உசிலம்பட்டி மருத்துவமனையில் படுகாயம் அடைந்த காவலர் பாண்டி மற்றும் சேகர் மருத்துவமனையில் ஆறுதல் கூறி சம்பவ இடத்தை பார்வையிட்டார். இதுகுறித்து காவல்துறையினர் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே உத்தப்புரத்தில் சாதி கலவரம் நடந்தது தமிழக அளவில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது. மேலும் இது போன்ற நிகழ்வு ஏற்படாமல் இருக்க மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின்பரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.