திருமங்கலம் நகராட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிமுகம்
திருமங்கலம் நகராட்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை தெற்கு மாவட்ட செயலாளர் மு மணிமாறன் அறிமுகம் செய்து வாழ்த்தினார்;
மதுரை மாவட்டம், திருமங்கலம் நகராட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மு. மணிமாறன் அறிமுகம் செய்து வாழ்த்துகளை தெரிவித்தார் .
மதுரை மாவட்டம், திருமங்கலம் நகராட்சி தேர்தலுக்கு மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இன்று 27வார்டுகள் வேட்பாளர்களை மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மு. மணிமாறன் இன்று அறிமுகம் செய்து வெற்றி பெற வாழ்த்துகள் தெரிவித்தார். பேரையூர் பேரூராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து வைத்தார். கூட்டணி கட்சி விசிக, சிபிஎம், மதிமுக ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களையும் சேர்த்து அறிமுகம் செய்து வைத்தார் .
இந்நிகழ்வில், மதுரை தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதன்குமார் , திருமங்கலம் நகர செயலாளர் மு .சி .சோ. முருகன், அவைத் தலைவர் நாகராஜ் ,பொதுக்குழு உறுப்பினர் சிவமுருகன் ,கப்பலூர் சந்திரன் ,மாணவரணி அமைப்பாளர் பாண்டி முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.