பெரியார் சிலை அவமதிப்பு: திராவிட கழகம் ,மதிமுக ,விசிக உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டம்
திருமங்கலம் பெரியார் திடலில் திராவிட கழகம், மதிமுக ,விசிக ,ஆதிதிராவிட கழகம் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்;
திருமங்கலம் நகரில் திராவிட கழகம் மற்றும் நகர மதிமுக சார்பில் கோவை வெள்ளனுரில் தந்தை பெரியார் சிலைக்கு சில கயவர்களால் அவமதிப்பு செய்ததை கண்டித்தும், காவல்துறையினர் தவறு செய்தவர்களை கைது செய்திட கோரியும். ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு, நகர செயலாளர் அனிதா பால்ராஜ் தலைமையில் அவைத்தலைவர் திருப்பதி, பொருளாளர் முருகன், விவசாயிகள் அணி செயலாளர் ரமேஷ், துணை செயலாளர் சிவனாண்டி, நகர துணை செயலாளர்கள் கணேசன், சௌந்தரபாண்டி, இளைஞர்கள் அணிசெயலாளர் ஜெயபால், 27வது வார்டு செயலாளர் காசி மற்றும் திராவிட இயக்க மாவட்ட செயலாளர் தோழர். எரிமலை. நகர செயலாளர் முத்துகருப்பன் சிபிஐ கட்சி தாலுகா செயலாளர் ஒ.சுப்புகாளை, மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் சந்தானம், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தாலுகா செயலாளர். பழக்கடை.சுப்பிரமணி மற்றும் ஆதிபேரவை கட்சியினர் கலந்து கொண்டனர்.