வயல்வெளியில் வைத்த மின்வேலியில் சிக்கிய கணவர் பலி: ஆபத்தான நிலையில் மனைவி

மதுரை கூட கோவில் அருகே வலையங்குளம் கிராமத்தில் காட்டுப்பன்றிக்காக வைத்த மின்வேலியில்சிக்கிய தம்பதியர் கணவர் பலியானார்;

Update: 2021-12-15 06:00 GMT

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கூடக்கோவில் சரகத்திற்கு உட்பட்ட வலையங்குளம் கிராமத்தில் கிருஷ்ணன் ( 38 )அக்கம்மாள் வயது 35 கூலித்தொழிலாளி இவர்கள் இன்று அதிகாலை இவரடைய தோட்டத்தில் பருத்தி எடுக்க சென்றுள்ளனர் .

அப்பொழுது அருகேயுள்ள கதிர்வேல் என்பவர் தனது தோட்டத்திற்கு காட்டுப்பன்றிகள் புகுவதை தடுக்க நெல் பயிருக்கு மின்வேலி அமைத்துள்ளார். இதனை அறியாத கிருஷ்ணன் தண்ணீரில் கையை கழுவியபோது மின்சாரம்  தாக்கி உயிருக்கு போராடியுள்ளார். இதனை கண்ட மனைவி அக்கம்மாள் கணவனை காப்பாற்ற முயன்றுள்ளார்.

அப்பொழுது அக்கமாளும் மின்சாரம் தாக்கியது. இவ்விபத்தில் கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார். இந்நிலையில் அக்கம் பக்கத்தினர் வந்து மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த அக்கம்மாளை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் குறித்து கூடக்கோவில் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலின் அடிப்படையில் கூடக்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மின்சாரம் தாக்கி இறந்த கிருஷ்ணன் உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடற்ராய்வுக்கு அனுப்பி வைத்தனர். மின்சார வேலி அமைத்து கதிர்வேலு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கதிர்வேலு தற்போது தலைமறைவாகியுள்ளார் என கூறப்படுகிறது.கிருஷ்ணன் அக்கம்மாள்  தம்பதியினருக்கு  இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர்.போலீசார் மின்வேலி அமைத்த கதிர் வேலுவை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News