திருமங்கலம் நகரில் வீடுகளில் தொடர் திருட்டு: அச்சத்தில் பொதுமக்கள்
திருமங்கலம் நகர் பகுதி பூட்டியிருக்கும் வீடுகளில் நடைபெறும் தொடர் திருட்டை தடுக்க போலீஸார் திணறி வருகின்றனர்
மதுரை மாவட்டம், திருமங்கலம் நகர் கற்பகம் நகர் பகுதியில் அழகர்சாமி இவர் தனியார் உணவகத்தின் சப்ளையர் ஆக பணிபுரிந்து வருகிறார். இவர் வெளியூர் சென்ற நிலையில் வீட்டின் பூட்டை உடைத்து உண்டியலில் வைத்திருந்த பணம் 3 பவுன் தங்க நகை மற்றும் பித்தளை பாத்திரங்கள் அனைத்தையும் மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
வெளியூர் சென்ற அழகர்சாமி வீட்டிறகு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் கிடந்துள்ளது .இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அழகர்சாமி திருமங்கலம் நகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்து போலீஸார் விசாரிக்கின்றனர். கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு பாரதிய ஜனதா கட்சி முக்கிய பிரமுகர் விஜய ராஜேந்திரன் வீட்டில் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும், அருகே டி. கல்லுப்பட்டி, திருமங்கலம் நகர், டி. குன்னத்தூர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து திருட்டு சம்பவம் நடைபெற்று வருகிறது.. இதனால் திருமங்கலம் தொகுதி மக்களிடம் காவல்துறையினரின் நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது ஏன் என்ற கேள்வி உருவாகியுள்ளது. திருமங்கலம் நகர் மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் பணம் நகைகள் திருடப்பட்ட சம்பவங்களில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறை திணறுகின்றனர். திருமங்கலம் நகர் மற்றும் தொகுதி மக்கள் நலன் கருதி மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீவிர கவனம் செலுத்தி திருடர்களை விரைந்து பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் இப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.