மழைநீரால் 50 ஏக்கர் மக்காச்சோளம் சேதம் - விவசாயிகள் சோகம்

டி.கல்லுப்பட்டி குட்பட்ட கவசக்கோட்டை பகுதியில், சுமார் 50 ஏக்கர் மக்காச்சோளம், தண்ணீர் நிரம்பி நின்றதால் சேதமடைந்தது.

Update: 2021-12-02 10:30 GMT

பாதிக்கப்பட்ட சோளப்பயிர்கள். 

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள கவசக்கோட்டையில்,  சுமார் 50 50 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டு வருகின்றனர். கடந்த 20 நாட்களுக்கும் மேலாக இப்பகுதியில் கனமழை பெய்து வரும் நிலையில், மக்காசோளம் பயிரிடப்பட்ட வயல்வெளி முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்பதால் மக்காசோள பயிர்கள் அனைத்தும் கருகி நாசமாகியுள்ளன.

இந்நிலையில்,  விவசாயிகள் அனைவரும் கடன் பெற்று மக்காச்சோளம் பயிரிட்டதாக வருத்தத்துடன் தெரிவித்தனர். மக்காச்சோளம் பயிர்கள் கருகிப்போன சம்பவம், இப்பகுதி விவசாயிகளிடையே பெரும் வருத்தத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு இவர்கள் வாழ்வாதாரம் மேலோங்கும் வகையில் தமிழக அரசு தானாக முன்வந்து பாதிப்புக்குள்ளான இடங்களை ஆய்வு செய்து நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கையை கண்ணீர் மல்க முன்வைத்துள்ளனர்.

Tags:    

Similar News