மிரட்டலால் பள்ளிக்கு செல்ல அச்சம்: மதுரை மாணவிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த மாணவிகள் மதுரை ஆட்சியரிடம் மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது;

Update: 2021-12-21 01:30 GMT

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த காண்டை கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டி ,முருகேஸ்வரி, தம்பதியினர் இவர்கள் இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர் .மாணவிகள் இருவரும் அருகில் உள்ள அரசு பள்ளியில் முதல் மகள் பன்னிரண்டாம் வகுப்பும் ,இரண்டாவது மகள் 11ஆம் வகுப்பும் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் முருகேஸ்வரி வீட்டிற்கு எதிர் வீட்டில் வசித்து வரும் செல்வம் என்பவர் வீட்டில் தனியாக இருந்த  இரு பெண் பிள்ளைகளை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார் . அப்பொழுது அறிவாலும் அவர்களை தாக்கியதாக சொல்லப்படுகிறது.இதில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியின் கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டு உள்ளது .இதனை அடுத்து மாணவி மதுரை ராஜாஜி மருத்துவமனை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து பெற்றோர்கள் சிந்து பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

புகாரின் அடிப்படையில் சிந்துபட்டி போலீசார் செல்வத்தை கைது செய்து 15 நாாள் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ஜாமீனில் வெளிவந்த செல்வம் சிகிச்சை முடிந்து வீட்டில் உள்ள முருகேஸ்வரி மகள் இருவரையும் செல்வம் தினசரி மிரட்டி வந்துள்ளார். மேலும் பள்ளிக்கு செல்லும் சமயங்களிலும், அவர்களை பின் தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்த நிலையில் மாணவிகள் பெற்றோர் இன்று மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து தங்களது குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்க கோரி மனு அளித்தனர்.அதில் தங்களது குடும்பத்தினருக்கும் செல்வத்திற்கும் எந்த பகையும் இல்லை. தேர்தல் முன்விரோதம் என பொய்யான காரணத்தைக் கூறி எங்கள் பிள்ளைகளை கையில் வெட்டியது உடன் பள்ளிக்கு செல்லும் போது தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறார். இதனால் உயிர் பயத்துடன் பள்ளிக்கு செல்லாமல் உணவு கூட உண்ணாமல் அச்சத்துடன் தனது மகள்கள் உள்ளதாக பெற்றோர்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகரிடம் கூறினர் .

தினமும் அச்சுறுத்தி வருவதால் மாணவிகள் அச்சத்துடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்த விவகாரம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.முனியாண்டி முருகேஸ்வரி தம்பதியினர் வேலைக்கு சென்றவுடன் வீட்டில் பெண் பிள்ளைகள் தனியாக இருக்கும்போது அவர்களை மிரட்டி இதுபோன்ற சூழ்நிலையில் ஈடுபடுவதால் அசம்பாவிதம் எதுவும் மீண்டும் ஏற்படுவதை தடுக்க மாவட்ட நிர்வாகமும் காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர் .

Tags:    

Similar News