தமிழர் திருநாள் தைப் பொங்கலை முன்னிட்டு திமுக சார்பில் சமத்துவப் பொங்கல்

தெற்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் மாவட்ட செயலாளர் மு.மணிமாறன் தலைமையில் பொங்கல் வைத்து கொண்டாடினர்;

Update: 2022-01-13 13:45 GMT

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மதுரை திமுக தெற்கு மாவட்ட செயலாளர் திரு மு.மணிமாறன் அவர்களின் தலைமையில் சமத்துவ பொங்கல் வைத்து பொதுமக்களுக்கு வழங்கினர். தமிழர் திருநாள் தைப்பொங்கலை வரவேற்று திமுகவினர் சமத்துவ பொங்கல் வைத்து  கொண்டாடினர்.

இந்நிகழ்வில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதன்குமார், மாவட்ட அவை குழு தலைவர் நாகராஜ், பொதுக்குழு உறுப்பினர் சிவமுருகன், திருமங்கலம் நகர செயலாளர் .மு.சி.சோ. முருகன் திருப்பரங்குன்றம் துணை சேர்மன் ஜெயகுமார் ,தகவல் தொழில் நுட்ப அணி திருமங்கலம் ஒருங்கிணைப்பாளர் ராஜா பிரபாகரன், கருவேலம்பட்டி வெற்றி, திருமங்கலம் ஞானசேகரன், மற்றும் திருமங்கலம் ஒன்றிய மகளிர் அணி மற்றும் நகர நிர்வாகிகள், மாவட்ட பொருப்பாளர்கள்,இளைஞர் அணியினர், திருப்பரங்குன்றம் தொகுதி திமுக முக்கிய பொறுப்பாளர்கள், தொண்டர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் சமத்துவ பொங்கல் பங்கேற்ற பெண்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. 

Tags:    

Similar News