திருமங்கலத்தில் ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம்

திருமங்கலம் அலகு மையத்தில் மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.

Update: 2022-02-25 11:52 GMT

திருமங்கலம் ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

திருமங்கலம் ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டார இயக்க மேலாண்மை அலகு அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் இருந்து பாரத் நிகேதன் இன்ஜினியரிங் கம்பெனி, மதுரையிலிருந்து சி.எஸ்.சி கம்பியூட்டர், திருவள்ளுவர் கிராமப்புற வளர்ச்சி நிறுவனம், மற்றும் ஜி.பி.ஆர் நிறுவனம் என 20க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்ட நிலையில் மிகவும் வேலையில்லாமல் கஷ்டத்தில் வாழும் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இளைஞர்கள், கல்லூரி படிப்பை முடித்த 100க்கும் மேற்பட்ட மாணவியர்கள் இம்முகாமில் பங்கேற்று பயனடைந்தனர்.

இம்முகாமில் பணிக்கான தேர்வானவர்களுக்கு தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மதுரை திட்ட இயக்குனர் காளிதாசன் தலைமையில் பணிக்கான ஆணையினை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் உதவி திட்ட அலுவலர்கள் சின்னத்துரை, (S&P) மற்றும் காளிதாஸ், வெள்ளைபாண்டி, மதேலம்மாள் மற்றும் வட்டார இயக்க மேலாளர் வி.பாக்கியம், மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் குமுதா, சந்தியா, ரேணுகா, பிரியா, அம்பிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News