திருமங்கலம் நகராட்சித் தேர்தலில் திமுக வெற்றி : 10 ஆயிரம் பேருக்கு அசைவ விருந்து
திருமங்கலத்தில் நகராட்சி நகர் மன்றத் தேர்தலில் தலைவராக ரம்யா முத்துக்குமார் துணைத்தலைவராக ஆதவன் அதியமான் தேர்வு;
மதுரை மாவட்டம், திருமங்கலம் நகராட்சி தேர்தலில் திமுக கட்சி சார்பில் அறிவித்த வேட்பாளர்களை நகர்மன்றத் தலைவராக ரம்யா முத்துக்குமார், நகர்மன்றத் துணைத் தலைவராக ஆதவன் அதியமான் ஆகியோரை தேர்ந்தெடுத்ததைமைக்கு நன்றி கூறும் வகையில் காளியம்மன் கோவிலில் கிடாய் வெட்டி திமுக கவுன்சிலர்களுக்கும் பொதுமக்களுக்கும் அசைவ விருந்து வழங்கப்பட்டது.
நிகழ்வை, மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் மு. மணிமாறன் துவக்கி வைத்தார். திமுக மாநில ,மாவட்ட, திருமங்கலம் நகரம் மற்றும் திருமங்கலம் தொகுதி முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் பங்கேற்றனர் .மேலும் தோழமைக் கட்சி முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்றனர். அசைவ விருந்து சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று உணவருந்திச்சென்றனர். நகர்மன்றத் தலைவர் ரம்யா முத்துக்குமார், நகர்மன்ற துணைத்தலைவர் ஆதவன் அதியமான் ஆகியோருக்கு சால்வை அணிவித்து மக்கள் பணிசிறக்க நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.