ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் திமுகவினர் வெளிநடப்பு

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேசிய ஊரக வளர்ச்சி பணியில் முறைகேடு புகார் கூறி திமுக வெளிநடப்பு

Update: 2021-12-31 12:30 GMT

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியங்கள யூனியன் அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியங்கள யூனியன் அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் யூனியன் அலுவலக அதிகாரிகள் மற்றும் அதிமுக, திமுக, பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்கள் தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் நிிதி. க்ணக்கின்  விவாதங்கள் நடைபெற்றது.

 இக்கூட்டத்தில் சேர்மன் லதா ஜெகன் உட்பட பலர் விவாத்தில் ஈடுபட்டனர். இதில் 6 கோடியே தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் நிதி வந்துள்ளதாகவும், இதனை ஒருதலைப்பட்சமாக ஓரிரு ஊராட்சிகளுக்கு மட்டுமே இந்த நிதி பணம் ஒதுக்க பட்டதாகவும்  திமுக உறுப்பினர் மு.சி.சோ.முருகன்  குற்றச்சாட்டினார். .

திருமங்கலம் யூனியன் அலுவலகத்திற்கு உட்பட்ட ஊராட்சிகள் அனைத்திற்கும் பாரபட்சமின்றி நிதி ஒதுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து திமுக ஒன்றிய கவுன்சிலர்கள் நான்கு பேர் வெளிநடப்பு செய்தனர். இதனையடுத்து ஊராட்சிகளில் திட்ட நிதிகள் முழுமையாக சென்றடையவும் திட்ட நிதிகளை பணிகள் குறித்த ஆய்வுகளை முறையாக ஊராட்சி மன்ற தலைவர் கவுன்சிலர் முன்னிலையில் மேற்கொள்ள வேண்டுமென்று விவாதம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து தேசிய ஊரக வளர்ச்சி நிதியிலிருந்து பணிக்கு ஒதுக்கிய பணிகளில் அரசு அதிகாரிகள் கையூட்டு வாங்குவதாகவும் பாரதிய ஜனதா கட்சியின் கவுன்சிலர் ஓம் ஸ்ரீ முருகன் குற்றச்சாட்டை முன்வைத்தார். இதற்கு அரசு அலுவலர்கள் தாங்கள் ஏதும் பணம் வாங்கவில்லை என்று விளக்கமளித்தனர். இக் கூட்டத்தில் திமுக வெளிநடப்பு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News