திருமங்கலம் நகராட்சி தேர்தலில் பிரசாரமின்றி வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்
திருமங்கலம் நகராட்சி தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ளாமல் 6 வது வார்டில் திமுக வேட்பாளர் ரம்யா முத்துக்குமார் வெற்றி பெற்றார்;
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி தேர்தலில் 6வது வார்டில் பிரசாரம் மேற்கொள்ளாமல் வெற்றி வாகை சூடிய திருமங்கலம் நகராட்சி திமுக வேட்பாளர் ரம்யா முத்துக்குமார் .
திருமங்கலம் நகராட்சி தேர்தலில் திமுக வேட்பாளர்கள் 27 வார்டில் போட்டியிட்டனர். 6வது வார்டில் ரம்யா முத்துக்குமார் போட்டியிட்டார். நகராட்சித் தேர்தலில் திமுக 19 வார்டுகளில் வெற்றி பெற்று பல ஆண்டுகளுக்கு பிறகு நகராட்சி நகர் மன்ற தலைமை கைப்பற்றியுள்ளது.இந்நிலையில், 6வது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ரம்யா முத்துக்குமார் அவர்கள் பிரச்சாரம் மேற்கொள்ளாமல் எதிர்த்து நின்ற அதிமுக வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றார். திருமங்கலம் 19 வாரடுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்ற வாக்குகளை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் முன்னோடியாக 6 வது வார்டில் போட்டியிட்டா ரம்யாமுத்துகுமார் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.