திருமங்கலம் நகராட்சி: திமுக வேட்பாளர்கள் அறிமுக விழா
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.;
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி தேர்தலில் போட்டியிடும் 27 வார்டுகளுக்கு உரிய வேட்பாளர்களை திமுக மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் திரு மு.மணிமாறன், நேற்று திருமங்கலம் சந்தைப்பேட்டை பகுதியில் அறிமுகம் செய்து வைத்தார். பின்னர், அவர்கள் அனைவரும் ஊர்வலமாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இவ்விழாவில் திமுக முக்கிய நிர்வாகிகள் ,பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.